நீண்ட நாட்களாக பதிவுலகில் என்னுடைய எழுத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பதிவுலகில் இணைந்தேன் ஆனால் இணைந்த சில நாட்களிலேயே எனது வீட்டு கணினி அதன் செயற்பாட்டை இழந்துவிட்டது. இதை ஒரு தடங்கலாக எண்ணாமல் மீண்டும் பதிவெழுத வேண்டும் என்று வந்துள்ளேன். இசை பற்றிய பதிவோடு Re-entry ஆகிறேன்.
ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீ தானே என் பொன் வசந்தம்’.
இளையராஜாவின் இசைப்பற்றி யாருக்கும் விளம்பரம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அந்தளவிற்கு அவர் இசை பேசும். காலத்தை வென்ற பல பாடல்களை இசை பிரியர்களுக்கு தந்துள்ளார். அதேபோன்று கவுதம் வாசுதேவ் மேனனின் காதலை மையமாக வைத்து வந்த முன்னைய படங்களான மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களின் வெற்றிக்கு பாடல்கள் பெரிதும் பங்காற்றியுள்ளது. முதல் முறையாக இளையராஜா – கவுதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதனால் இப்படத்தின் பாடல்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. இப்படி பல எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் ஆடியோ சிடி சோனி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
செயற்கை ஒலிகள் இல்லாமல் லண்டன் ஆர்கெஸ்ட்ரா பங்களிப்போடு இயல்பான மெல்லிசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இடைக்கால பாடல்களை மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளாரா ? இளையராஜா என்று யோசிக்க வைத்துவிட்டது. இது என்னுடைய கருத்துதான்.
ஆனாலும் என்னோவோ தெரியல Saindhu Saindhu Nee Parkum Pothu என்ற பாடல் மட்டும் அதற்கு என்னை அடிமையாக்கிவிட்டது. ஓ அது யுவன் பாடியதாலோ :P
முடிந்தால் படித்த பின் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே !!!

0 comments: on "இளையராஜாவின் "நீ தானே என் பொன்வசந்தம்""
Post a Comment