ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் ஞாபகார்த்தமாக இந்த பூமியில் தான் இருந்ததை மற்றவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லாமல் ஒரு மாங்கன்றை பயிருடுகிறான் அது வளர்வதற்கு தினந்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறான் சிறிது காலத்திற்கு பிறகு அது பெரிய மரமாகி மாங்கனிகளை உற்ப்பத்தி செய்கின்றது.
அவன் அதை ருசித்து சாப்பிடுகிறான் பின் திடீர் என்று ஒரு நாள் அவன் இவ்வுலகை விட்டு பிரிந்து செல்கிறான். ஆனால் அவன் வளர்த்த அந்த மாமரமோ அவன் இறந்த பின்னும் அவன் பெயர் சொல்லி நிற்கிறது. அதில் விளையும் பயனை மற்றவர்கள் அனுபவிக்கின்றார்கள். அவன் இவ்வுலகை விட்டு சென்றாலும் அவன் நட்டு வைத்த மரம இன்னும் பல மனிதர்களின் தேவையை நிறைவேற்றுகிறது.
ஒருவன் மனிதனா ? அல்லது மாமனிதனா ? என்பது அவன் செய்யும் செயல்களில் இருந்தே அது இந்த உலகிற்கு புலப்பட்டுவிடும். தான் தன்னுடைய அம்மா, அப்பா, சகோதர்கள், மனைவி, பிள்ளைகள், சொந்தம் என்று வாழ்பவன் சாதாரண மனிதன் ஆனால் மாமனிதன் அவ்வாறில்லை நான் என்ற வார்த்தையே அவன் மனதில் தோன்றாது மாறாக நாம் நாம் என்ற வார்த்தைதான் உதிக்கும். எதை செய்தாலும் தன்னை சாரதவர்களும் நன்மை அடைவார்களா என எண்ணிப்பார்ப்பான் எண்ணுவது மட்டுமல்ல அதில் வெற்றியும் காண்பான். இதற்கு சான்றாக பல தலைவர்கள் நம்மை கடந்து சென்றுவிட்டார்கள் உதாரணமாக நம் நாட்டு தலைவர் தந்தை செல்வா பிற நாட்டு தலைவர்களான மகாத்மா காந்தி, மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா என பலரை குறிப்பிடலாம்.
தெய்வம் உண்டா? இல்லையா? என்பது நமக்கு தெரியாது ஆனால் நம் கண்ணுக்கு புலப்பட்ட தெய்வங்கள் இவை. இன்றைய காலகட்டத்தில் எத்தனை பேர் இவ்வாறு உள்ளனர் விரல் விட்டு என்னும் அளவில் கூட இங்கு யாருமே இல்லை என்பதுதான் என் வருத்தம்.
நீ இப்படி செய், நீ இப்படி வாழு என யாவரும் சொல்கிறார்களே தவிர யாரும் தாங்கள் அவ்வாறு வாழ வேண்டும் என எண்ணியது கூட கிடையாது. சிந்தித்து பார்த்தேன் மற்றவர்களை குறை கூற எனக்கு தகுதியில்லை என நான் அறிந்தேன் முதலில் என்னை நான் மாற்ற வேண்டும் என எண்ணினேன்.
முதலில் நான் யார் என என்னையே நான் கேட்டேன். வெளிமனம் கூறியது நீ சுதர்ஷன் என்று ஆம் அது தானே உண்மை என்று என் மூளையும் கூறியது. இல்லை இல்லை அது உன்னை இந்த உலகம் அடையாளப்படுத்த உன் பெற்றோர் சூட்டிய ஒரு பெயர் அவ்வளவுதான் என்று என் உள்மனம் உண்மையை வெளிக்காட்டியது. அப்படியென்றால் நான் யார் ??????????????

0 comments: on "நான் யார் ?"
Post a Comment