காதல் என்றால் என்ன? காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தாவறா? என்பன என்றைக்கும் புதிதாகத் தெரிகிற பழைய கேள்விகளே.
இப்படிப்பட்டதுதான் காதல் என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லிவிட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல் சிலருக்கு அமிர்தம், சிலருக்கு விஷம், சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது புரியாத புதிர், ஏமாற்றம், பயம் இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொரு விதமான உருவெடுத்துக்கொள்ளும்.
ஏன் இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ? மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்பதும் கேள்விக்குறியே ஆனாலும் அது ஒவ்வொருவரது மனநிலையைப் பொறுத்து உருவெடுத்து அமைகிறது என்பது சிலரது கருத்து.
காதல் என்பதே ஒரு வகையில் திட்டமிடுதல்தான் “ எனக்கு எப்படியும் யாராவது ஒருவனோ அல்லது ஒருத்தியோ கணவனாக அல்லது மனைவியாக வரப்போகிறார். என்னை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிற எனக்காக இவ்வளவு செய்யும் நீயே, என்னில் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீயே, எனக்காக வாழும் நீயே அந்த ஒருவனாகவோ அல்லது ஒருத்தியாகவோ இருந்தால் நல்லதுதானே “ என்று மனம் போடும் கணக்கே இந்த காதல் ஆகும்.


3 comments: on "காதல் என்றால் என்ன ?"
super சிறப்பான பதிவு !!!எங்கட பஜார்ல உன்ன விட யாரும் காதலபத்தி கதைக்க ஏலாது
Nalla sonneenka boss...
//எங்கட பஜார்ல உன்ன விட யாரும் காதலபத்தி கதைக்க ஏலாது//
Y da
Post a Comment