Latest Posts

Sunday, September 9, 2012

இளையராஜாவின் "நீ தானே என் பொன்வசந்தம்"


நீண்ட நாட்களாக பதிவுலகில் என்னுடைய எழுத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பதிவுலகில் இணைந்தேன் ஆனால் இணைந்த சில நாட்களிலேயே எனது வீட்டு கணினி அதன் செயற்பாட்டை இழந்துவிட்டது. இதை ஒரு தடங்கலாக எண்ணாமல் மீண்டும் பதிவெழுத வேண்டும் என்று வந்துள்ளேன். இசை பற்றிய பதிவோடு Re-entry ஆகிறேன்.
ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீ தானே என் பொன் வசந்தம்’. 

 இளையராஜாவின் இசைப்பற்றி யாருக்கும் விளம்பரம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அந்தளவிற்கு  அவர் இசை பேசும். காலத்தை வென்ற பல பாடல்களை இசை பிரியர்களுக்கு தந்துள்ளார். அதேபோன்று கவுதம் வாசுதேவ் மேனனின் காதலை மையமாக வைத்து வந்த முன்னைய படங்களான மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களின் வெற்றிக்கு  பாடல்கள் பெரிதும் பங்காற்றியுள்ளது. முதல் முறையாக இளையராஜா – கவுதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதனால் இப்படத்தின் பாடல்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது. இப்படி பல எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் ஆடியோ சிடி சோனி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 
                                                            செயற்கை ஒலிகள் இல்லாமல் லண்டன் ஆர்கெஸ்ட்ரா பங்களிப்போடு இயல்பான மெல்லிசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இடைக்கால பாடல்களை மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளாரா ? இளையராஜா என்று யோசிக்க வைத்துவிட்டது. இது என்னுடைய கருத்துதான். 

ஆனாலும் என்னோவோ தெரியல Saindhu Saindhu Nee Parkum Pothu என்ற பாடல் மட்டும் அதற்கு என்னை அடிமையாக்கிவிட்டது. ஓ அது யுவன் பாடியதாலோ :P


முடிந்தால் படித்த பின் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே !!!
read more...

Friday, May 4, 2012

நான் யார் ?


               ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் ஞாபகார்த்தமாக இந்த பூமியில் தான் இருந்ததை மற்றவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லாமல் ஒரு மாங்கன்றை பயிருடுகிறான் அது வளர்வதற்கு தினந்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்க்கிறான் சிறிது காலத்திற்கு பிறகு அது பெரிய மரமாகி மாங்கனிகளை உற்ப்பத்தி செய்கின்றது.
                                            அவன் அதை ருசித்து சாப்பிடுகிறான் பின் திடீர் என்று ஒரு நாள் அவன் இவ்வுலகை விட்டு பிரிந்து செல்கிறான். ஆனால் அவன் வளர்த்த அந்த மாமரமோ அவன் இறந்த பின்னும் அவன் பெயர் சொல்லி நிற்கிறது. அதில் விளையும் பயனை மற்றவர்கள் அனுபவிக்கின்றார்கள். அவன் இவ்வுலகை விட்டு சென்றாலும் அவன் நட்டு வைத்த மரம இன்னும் பல மனிதர்களின் தேவையை நிறைவேற்றுகிறது.
                ஒருவன் மனிதனா ? அல்லது மாமனிதனா ? என்பது அவன் செய்யும் செயல்களில் இருந்தே அது இந்த உலகிற்கு புலப்பட்டுவிடும். தான் தன்னுடைய அம்மா, அப்பா, சகோதர்கள், மனைவி, பிள்ளைகள், சொந்தம் என்று வாழ்பவன் சாதாரண மனிதன் ஆனால் மாமனிதன் அவ்வாறில்லை நான் என்ற வார்த்தையே அவன் மனதில் தோன்றாது மாறாக நாம் நாம் என்ற வார்த்தைதான் உதிக்கும். எதை செய்தாலும் தன்னை சாரதவர்களும் நன்மை அடைவார்களா என எண்ணிப்பார்ப்பான் எண்ணுவது மட்டுமல்ல அதில் வெற்றியும் காண்பான். இதற்கு சான்றாக பல தலைவர்கள் நம்மை கடந்து சென்றுவிட்டார்கள் உதாரணமாக நம் நாட்டு தலைவர் தந்தை செல்வா பிற நாட்டு தலைவர்களான மகாத்மா காந்தி, மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா என பலரை குறிப்பிடலாம்.
                                           தெய்வம் உண்டா? இல்லையா?  என்பது நமக்கு தெரியாது ஆனால் நம் கண்ணுக்கு புலப்பட்ட தெய்வங்கள் இவை. இன்றைய காலகட்டத்தில் எத்தனை பேர் இவ்வாறு உள்ளனர் விரல் விட்டு என்னும் அளவில் கூட இங்கு யாருமே இல்லை என்பதுதான் என் வருத்தம்.
                 நீ இப்படி செய், நீ இப்படி வாழு என யாவரும் சொல்கிறார்களே தவிர யாரும் தாங்கள் அவ்வாறு வாழ வேண்டும் என எண்ணியது கூட கிடையாது. சிந்தித்து பார்த்தேன் மற்றவர்களை குறை கூற எனக்கு தகுதியில்லை என நான் அறிந்தேன் முதலில் என்னை நான் மாற்ற வேண்டும் என எண்ணினேன்.
                                          முதலில் நான் யார் என என்னையே நான் கேட்டேன். வெளிமனம் கூறியது நீ சுதர்ஷன் என்று ஆம் அது தானே உண்மை என்று என் மூளையும் கூறியது. இல்லை இல்லை அது உன்னை இந்த உலகம் அடையாளப்படுத்த உன் பெற்றோர் சூட்டிய ஒரு பெயர் அவ்வளவுதான் என்று என் உள்மனம் உண்மையை வெளிக்காட்டியது. அப்படியென்றால் நான் யார் ??????????????     
read more...

Thursday, March 1, 2012

காதல் என்றால் என்ன ?


    
                         காதல் என்றால் என்ன? காதல் சரியா தவறா? காதலிப்பது சரியா தாவறா? என்பன என்றைக்கும் புதிதாகத் தெரிகிற பழைய கேள்விகளே.

                   இப்படிப்பட்டதுதான் காதல் என்று யாராலும் கட்டம் கட்டி இலக்கணம் சொல்லிவிட முடியாது என்பதுதான் காதலின் சிறப்பம்சம். காதல் சிலருக்கு அமிர்தம், சிலருக்கு விஷம், சிலருக்கு அது புனிதம், நம்பிக்கை, ஏகாந்தம். வேறு சிலருக்கோ அது புரியாத புதிர், ஏமாற்றம், பயம் இவ்வாறு காதல் எல்லோரிடத்திலும் ஒவ்வொரு விதமான உருவெடுத்துக்கொள்ளும்.  

 
                                 ஏன் இப்படி காதலின் முகம் ஆளாளுக்கு மாறுபடுகிறது? அதை அமிர்தமாகவோ, விஷமாகவோ? மாற்றுவது எது? நம்பிக்கையான காதலின் நிறம் என்ன? ஏமாற்றம் தரும் காதலின் உருவம் என்ன? என்பதும் கேள்விக்குறியே ஆனாலும் அது ஒவ்வொருவரது மனநிலையைப் பொறுத்து உருவெடுத்து அமைகிறது என்பது சிலரது கருத்து. 
                                    காதல் என்பதே ஒரு வகையில் திட்டமிடுதல்தான் “ எனக்கு எப்படியும் யாராவது ஒருவனோ அல்லது ஒருத்தியோ கணவனாக அல்லது மனைவியாக வரப்போகிறார். என்னை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிற எனக்காக இவ்வளவு செய்யும் நீயே, என்னில் இவ்வளவு அக்கறை கொள்ளும் நீயே, எனக்காக வாழும் நீயே அந்த ஒருவனாகவோ அல்லது ஒருத்தியாகவோ இருந்தால் நல்லதுதானே “ என்று மனம் போடும் கணக்கே இந்த காதல் ஆகும்.


read more...