நண்பர்களே இந்த பதிவித்தளத்திற்கு புதியவன் என்ற வகையில் என்னை நான் அறிமுகப்படுத்த வேண்டியது என்னுடைய பணியாகும். என்னை பற்றி குறிப்பிடுவதற்கு பெரிதாக ஒன்றும்மில்லை என்றாலும் சிறிதாக ஏதோ சொல்கிறேன். என்னுடைய முழுப்பெயர் பாலச்சந்திரன் சுதர்ஷன் பாடசாலைக்கல்வியை முடித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. தற்சமயம் ஒரு அரசு அலுவலகத்தில் கணக்கு லிகிதராக இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். எனது அறிமுகம் காணும் என்று நினைக்கிறேன்
என்னுடைய பதிவு எழுத வேண்டும் என்று இருந்த நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்வதற்கு உதவி புரிந்த எரியாத சுவடிகளின் பதிவாளர் பவன் அவர்களையே சாரும் இத்தருணத்தில் அவருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் நண்பன் பவனுக்கு இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்
22அகவையில் காலடி எடுத்து வைக்கும் என் நண்பனுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
நிஜங்கள் தினமும் வந்து செல்கிறது நினைவுகள் மட்டும் ஏனோ புரியவில்லை நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளேயே இருந்து விடுகிறது – அது போலதான்
ஆயிரமாயிரம் உறவுகளும் நண்பர்களும் நம்மை கடந்து செல்வார்கள் அதில் ஒரு சிலர்மட்டும்தான் எம் நெஞ்சில் நிலைத்து நிற்பார்கள் அதில் நீயும் ஒருவன்
Wish u a happy birthday machaaaaaaaaaaaaaaan
Wish u a happy birthday machaaaaaaaaaaaaaaan

1 comments: on "கன்னிப்பதிவு என் நண்பனுக்கான பிறந்தநாள் வாழ்த்தோடு வருகிறது"
நன்றி நண்பா,
பதிவுலகுக்கு வரவேற்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள் :-))
அந்த word verificationஐ தூக்கிவிடவும் :-))
Post a Comment